இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வளாகத்தில் கைது செய்யப்பட ருஷ்தி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கொம்பனித்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றும் ருஷ்தி காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்டார்.
ருஷ்தியின் கைது தீவிரவாதக் கருத்துக்களுடன் தொடர்புடையது என்று பொலிஸார் தெரிவித்ததுடன மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் மூன்று மாதக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இளைஞரை விடுதலை செய்யுமாறு பொதுமக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்ததுடன் ருஷ்தியின் கைது மற்றும் தடுப்புக்காவல் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களும் கவலைகளை எழுப்பின.