தெற்கு லெபனானின் சிடோனில் வெள்ளிக்கிழமை (04) இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் தமது தலைவர்களில் ஒருவரான ஹசன் ஃபர்ஹத் கொல்லப்பட்டதாக அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்தது.
அவர்களது அடுக்குமாடி குடியிருப்பு குறிவைக்கப்பட்டபோது ஃபர்ஹத் அவரது மகள் மற்றும் மகனுடன் கொல்லப்பட்டதை படைப்பிரிவு உறுதிப்படுத்தியது.
அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஃபர்ஹத்தின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இந்தப் படுகொலையைக் கண்டித்தும், பலஸ்தீன எதிர்ப்புத் தலைவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பின் ஒரு பகுதி என்று தெரிவித்தது. அவரது மரணம் பதிலளிக்கப்படாமல் போகாது என்று அல்-கஸ்ஸாம் படை சபதம் செய்தது.
இஸ்ரேலிய இராணுவம் பின்னர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது, வடக்கு கட்டளை மற்றும் புலனாய்வு சேவையின் வழிகாட்டுதலின் கீழ் முந்தைய இரவு சிடோன் பகுதியை குறிவைத்ததாகக் கூறியது.
இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, ஃபர்ஹத் லெபனானில் ஹமாஸின் மேற்குப் பிரிவின் தளபதியாக இருந்தார். கடந்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி சஃபெத் மீது ரொக்கெட்டுகளை ஏவியதற்கு அவர் பொறுப்பேற்றதாக இராணுவம் குற்றம் சாட்டியது.
இந்தத் தாக்குதலில் ஒரு பெண் சிப்பாய் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர். மேலும், சமீபத்திய மாதங்களில் இஸ்ரேலுக்கு எதிராக ஃபர்ஹத் மேலும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும், இது பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று அது விவரித்ததாகவும் அது கூறியது.