ஹஸ்ரத் மௌலானா சையத் முகமது ஆகில் காலமானார்

Date:

உத்திர பிரதேசம் மாநிலம் ஸஹாரன்பூர் மாவட்டம் மத்ரஸா மளாஹிருல் உலூமின் ஷேஃகுல் ஹதீஸ் மௌலானா முஹம்மது ஆகில் மளாஹிரி ஸஹாரன்பூரி (88) ஹழ்ரத் இன்று (28)காலமானார்.

மளாஹிருல் உலூம் ஸஹாரன்பூரிலேயே துவக்கம் முதல் இறுதி வகுப்புவரை பயின்று 1961 முதல் 2025 வரை சுமார் 64 ஆண்டுகள் அங்கேயே துணை ஆசிரியராக, பேராசிரியராக, தலைமை ஆசிரியராக, ஷேகுல் ஹதீஸாக, மதரஸா பொறுப்பாளாராக பல பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஷேக் ஜகரிய்யா (ரஹிமஹுல்லாஹ்)அவர்களின் மாணவராகவும் மருமகனாகவும் இருக்கிறார்கள்.

ஷேஃக் ஜகரிய்யா (ரஹிமஹுல்லாஹ்) விடம் இல்முல் ஹதீஸின் இஜாஸத்… தஸவ்வுஃப் தரீக்காவின் பைஅத் மற்றும் இஜாஸத் பெற்ற ஃகலீஃபாவும் ஆவார்கள்.

ஸுனனே அபூதாவூத் ஹதீஸ் கிரந்தத்திற்கு  அத்துர்ருல் மன்ழூத்  என்ற விளக்கவுரை நூலை உர்தூவில் பல பாகங்களாக எழுதியுள்ளார்கள்.

ஸலவாத்துகள் மற்றும் துஆக்களுக்கான ஒரு சிறு நூலையும் தொகுத்துள்ளார்கள்,
அன்னாரது அனைத்து சேவைகளையும் பொருந்திக் கொண்டு அல்லாஹு தஆலா தனது உயர்ந்த நல்லடியார்கள் கூட்டத்தில் அன்னாரைச் சேர்ப்பானாக…

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...