World Press Photo 2025 : இஸ்ரேல் தாக்குதலின் கோரமுகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய காசா சிறுவனின் புகைப்படம்!

Date:

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்த காசா சிறுவனின் புகைப்படத்திற்கு World Press Photo விருது கிடைத்துள்ளது.

இந்த புகைப்படத்தை எடுத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுக்க பயத்துடன் ஓடிவரும் சிறுமியின் படம் 19 ஆண்டுகளாக நடந்து வந்த ஒரு பெரும்போரை நிறுத்தியது.

அமெரிக்க ஆதரவுடன் வடக்கு வியட்நாமை எதிர்த்து, தெற்கு வியட்நாம் போரிட்ட காலத்தில் நிக் உட் என்ற புகைப்பட பத்திரிகையாளர் ஒரு படம் எடுத்தார்.

“நாபாம் சிறுமி” என்ற அந்த பிரபல புகைப்படம் போரின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த புகைப்படத்திற்காக நிக் உட்டிற்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

இதே போன்ற ஒரு புகைப்படத்தை காசாவில் எடுத்து World Press Photo விருது பெற்றுள்ளார் சமர் அபு எலூஃப் என்ற பெண்.

New york பத்திரிகைக்காக எலூஃப் எடுத்த புகைப்படத்திற்கு மிக உயரிய விருதான World Press Photo-வின் முதல் பரிசு கிடைத்துள்ளது.

கத்தாரை தளமாகக் கொண்டு இயங்கும் பலஸ்தீன புகைப்படக் கலைஞர் சமர் அபு எலூஃப், நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக எடுத்த இந்தப் புகைப்படத்தில், 9 வயது மஹ்மூத் அஜ்ஜோர் இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கைகள் இன்றி இருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த 59,320 புகைப்படங்களில் இருந்து மதிப்புமிக்க 68வது World Press Photo போட்டியின் வெற்றியாளராக மர் அபு எலூஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

World Press Photo அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அபு எலூஃப் கூறுவதாவது,

“மஹ்மூத்தின் தாயார் எனக்கு விளக்கிய மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. மஹ்மூத் தனது கைகள் துண்டிக்கப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தபோது, அவன் அவளிடம் சொன்ன முதல் வாக்கியம், ‘நான் உன்னை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?’ என்பதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இது சத்தமாகப் பேசும் ஒரு அமைதியான புகைப்படம். இது ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது, ஆனால் தலைமுறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பரந்த போரின் கதையையும் சொல்கிறது,” என்று World Press Photo நிர்வாக இயக்குனர் ஜூமனா எல் ஜெய்ன் கௌரி கூறுகிறார்.

மார்ச் 2024 இல் இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மஹ்மூத்தின் ஒரு கை துண்டிக்கப்பட்டது. மறு கை சிதைந்தது என World Press Photo அமைப்பு அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த 2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் 51,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா தெரிவிக்கிறது. காயமடைந்த இலட்சக்கணக்கானவர்களிலும் குழந்தைகள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...