உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க  தெரிவித்தார்.

அதன்படி, மே 3ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று வரை வீடுகளுக்கு சென்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் தங்கள் பகுதியில் உள்ள உப தபால் அலுவலகத்திற்குச் சென்று தமக்கான வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 94 வீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...