உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு: வத்திக்கான் முடிவு

Date:

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களையும் இவ்வாறு விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத்தாக்குதலின் 6 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்று கொழும்பு கொச்சிக்கை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு,

திருத்தந்தையின் திருப்பீடமான வத்திக்கானில் இயங்கும் இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தை வாசித்த போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார்.

இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறையின் தலைவர் மார்சல்லோ கர்தினால் செமேராறோ ஆண்டகையினால் 2024 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதத்தின் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் கொழும்பு கொச்சிக்டை புனித அந்ததோனியார் திருத்தலத்திலும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலும் தங்களது உயிரை இழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்களும் ஏனையோரின் பெயர்களும் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் அவர்கள் நம்பிக்கை மீது வைத்த தளம்பாத சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ஆண்டகைக்கு அறிவித்துள்ளார்.

இவர்கள் வாழ்ந்த காலத்தின் வரலாற்று சூழலும் சமூக சூழலும் மதத்தின் மீது கொண்டுள்ள பற்று மற்றும் தங்கள் விசுவாசத்தை பாதுகாக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைகளையும் பொதுவாக எடுத்துக்கொண்டு அவர்கள் காட்டிய மனப்பாங்கான வீரத்தையும் திருத்துறை மதிப்பிட்டுக்கொண்டு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

மேலும் அதே தினத்தில் உயிரிழந்த வேறு மதங்களைச் சார்ந்த 7 பேரும் மிக்க மரியாதையுடன் நினைவு கூரப்படுகின்றனர்.

மேற்குறிப்பிட்டுள்ள இந்த அகராதியில் அவர்களது நம்பிக்கைக்கு எதிராக தூண்டப்பட்ட வன்முறையால் நம்பிக்கை மீதுள்ள பொறுப்பு தங்கள் இரக்கத்தை சிந்தியவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் எமது அன்புக்குரிய சகோதர சகோதரிகளும் பிள்ளைகளும் ஆவார்கள். இவர்கள் காட்டிய நம்பிக்கையின் சாட்சியத்தை இறுதி வரை பாதுகாக்கவும் பரப்பவும் நினைவுகளை நிலைத்திருக்கச் செய்யவும் இந்த அறிவிப்பு வழங்கப்படுகின்றது என்று இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...