2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணை பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதி நிதிய கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விபரங்களைப் பெறுவதற்கான உத்தரவை நேற்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் இருந்து பெற விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.