பஹல்காம் தாக்குதல்:சவூதி விஜயத்தை முடித்துக்கொண்டு மோடி இந்தியா விரைவு: விமான நிலையத்தில் அவசர சந்திப்பு!

Date:

இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரில் பஹல்காம் பிரதேசத்திலுள்ள சுற்றுலாத் தளமான பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து சவூதிக்கான தனது இருநாள் விஜயத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.

விமான நிலையத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவை அவசரமாக சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளிநாட்டு விவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு அமைச்சர் ரஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோரை  உள்ளடக்கிய பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில்  முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அமெரிக்கா மற்றும் பெரு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது விஜயத்தை சுருக்கிக் கொண்டு கலந்து கொள்ளவுள்ளார்.

நேற்று நடைபெற்ற இத்தாக்குதலில் ஜக்கிய அரபு அமீரகம், நேபாளம் பிரஜைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

2019ஆம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...