பஹல்காம் தாக்குதல் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் கடிதம்!

Date:

காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி, ரணில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, இதை ‘கொடூரமான குற்றம்’ என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் குறிப்பாக உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட அவர், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

மேலும், இலங்கையில் மூன்று தசாப்த கால பிரிவினைவாத பயங்கரவாத மோதலையும் நினைவு கூர்ந்த ரணில் விக்ரமசிங்க, அண்மைய பஹல்காம் தாக்குதல் தீவிரவாதத்தின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை தெளிவாக நினைவூட்டுகின்றது.

அத்துடன், இந்த விடயத்தை ஒருங்கிணைந்த முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...