கத்தோலிக்கத் திருச்சபையின் புனித போப் பிரான்சிஸின் மறைவையொட்டி இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான வத்திகான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.
அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக வத்திக்கான் தூதரகம் நாளை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.
புனித போப் பிரான்சிஸின் மறைவை முன்னிட்டு, பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ கத்தோலிக்க சபை உள்ளிட்ட நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கத்தோலிக்க திருச்சபை கோரியுள்ளது.
உலகளவில் அறியப்பட்ட போப் பிரான்சிஸ் 88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவருக்கு உலகளாவிய ரீதியில்அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன.
Address:220 Bauddhaloka Mawatha
Colombo 07