மஃமூம்களுக்கு சடைவில்லாமல் மேலும் ஒரு மாதத்துக்கு பலஸ்தீனுக்காக குனூத் ஓதுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

Date:

மஃமூம்களுக்கு சடைவில்லாமல் மேலும் ஒரு மாதத்துக்கு பலஸ்தீனுக்காக குனூத் ஒதுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில்,

பலஸ்தீன் – காஸாவில் பல மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் கொடூரமான தாக்குதலில், அக்டோபர் 07 முதல் இன்று வரை 62,614 அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 118,958 பேர் காயமுற்றும் உள்ளனர் என ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றன.

எனவே, அப்பகுதியில் இடம் பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படவும் அமைதி, சமாதானம் மற்றும் நீதி நிலை நாட்டப்படுவதற்கும் அனைத்து மஸ்ஜித்களிலும் பஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்துடைய துஆவை ஐவேளைத் தொழுகைகளில் மஃமூம்களுக்கு சடைவில்லாமல் ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறும் அதில் பின்வரும் துஆக்களை சேரத்துக் கொள்ளுமாறும் மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

அத்துடன் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா மற்றும் இஸ்திஃபார் போன்ற நல்லமல்களைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.

Popular

More like this
Related

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...