மரபு ரீதியாக மூடப்பட்டது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை: இன்று நல்லடக்கம்

Date:

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை  மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது.

இந்நிலையில்,  திருவுடல் தாங்கிய பேழை இன்று சனிக்கிழமை (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, இன்றையதினம் இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் கத்தோலிக்க மக்கள் துக்கதினம் அனுஷ்டிப்பதுடன் பல ஆலயங்களில் இரங்கல் திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

வத்திக்கானில் இடம்பெறவுள்ள பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் வத்திக்கானின் உயர் நிலை அதிகாரிகள் மற்றும் பாப்பரசரின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளனர்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை  மரபு ரீதியாக மூடப்பட்டதையடுத்து, புனித பேதுரு பேராலயத்தின் உறுப்பினர்கள் பாப்பரசரின் திருவுடல் பேழைக்கு அருகில் இருந்து நல்லடக்கம் இடம்பெறும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

இதற்காக புனித மேரி பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையிலான கல்லறை ஒன்று தயாராகி வருகிறது.

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக வத்திக்கான் கூறியுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

அவரது பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் கடந்த 23ஆம் திகதி முதல் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...