மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க மருத்துவக்குழு ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
களுத்துறையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மியன்மாருக்கு உதவி வழங்குவது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
மியன்மார் அரசாங்கம் தேவையான அனுமதியை வழங்கியவுடன், அனர்த்த மீட்புப் பணிகளில் அனுபவமுள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“மியன்மாருக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான பொருட்களை வழங்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலதிகமாக களத்தில் உதவி வழங்க விசேட மருத்துவக் குழு ஒன்றை நாங்கள் நியமித்துள்ளோம்.
வெளிவிவகார அமைச்சு மூலம் உதவி வழங்க எங்கள் தயார் நிலையை மியன்மார் தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.