‘பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘: இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Date:

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து  இன்று வெள்ளிக்கிழமை  (18)  நீர்கொழும்பு தெல்வத்தை  சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கித்துசர ‘ அமைப்பினரின் ஏற்பாட்டில் ‘பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘ என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18 மாத காலமாக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...