ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் அரசாங்கத்தின் கீழ், இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது: பிரதமர்

Date:

நாம் வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மே தின செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு வெற்றி ஆண்டில் ஒரு மக்கள் அரசாங்கத்தின் கீழ் 139 ஆவது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

75 ஆண்டுகளாக ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நின்று ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் அரசாங்கத்தின் கீழ், இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது ஒரு வரலாற்று மைற்கல்லைக் குறிக்கிறது.

பல ஆண்டுகளாக இந்த நாட்டைப் பாதித்து வரும் ஊழலையும் அநீதியையும் ஒரே இரவில் மாற்ற முடியாது என்றாலும், அரசாங்கம் படிப்படியாக எல்லாவற்றையும் நெறிப்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து வருகிறது.

அரச, தனியார், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார சக்திகளையும் வலுப்படுத்த அரசாங்கம் ஒரு முறையான வேலைத்திட்டத்தைத் தயாரித்துள்ளதுடன், நாட்டை தன்னிறைவு பெறச் செய்வதில் முன்னணியில் இருக்கும் விவசாய சமூகத்தை வலுப்படுத்தவும் தயாராகவுள்ளது.

மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், மிகவும் ஸ்திரமான மற்றும் நம்பகமான எதிர்காலத்தை அடைவதற்கு நாம் ஒன்றிணைந்து நம்மை அர்ப்பணிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தை நாம் கடந்து செல்கிறோம்.

நாம் வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...