கடல் கடந்தும் இலங்கை மக்களுக்காக சேவை செய்த செய்யித் ஹமீத் மௌலானா மறைந்தார்

Date:

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அரை நூற்றாண்டு காலமாக இருந்து இலங்கை மக்களுக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் தொண்டாற்றிய செய்யித் ஹமீத் மௌலானா தனது 91 ஆவது வயதில் நேற்றிரவு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

1975 இல் ரியாதில் கால் பதித்த இவர், ஹோட்டல் விநியோகங்களுக்கென தனியான கம்பெனி ஒன்றை நிறுவி ரியாதின் பெரும் வர்த்தகப் புள்ளியாக மாறினார்.

ஐந்து தசாப்தங்களாக சவூதிக்காக நியமிமிக்கப்படும் அனைத்து இலங்கைத் தூதுவர்களுடனும் இணைந்து தனது செல்வத்தின் மூலமும் செல்வாக்கின் மூலமும் இலங்கையருக்கு பெரும் தொண்டாற்றினார்.

தனது X தளத்தில் இலங்கை பற்றிய செய்திகளைப் பரிமாறி வந்த இவர் பல்வேறு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட செய்யித் ஹமீத் மௌலானா முன்னாள் மேல் மாகாண ஆளுநர் செய்யித் அலவி மௌலானாவின் மருமகனுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ரியாதில் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...