காசாவுக்கான குவைத்தின் ஆதரவுக்கு ஜப்பானிய பிரதமர் பாராட்டு; இரு நாட்டுத் தீர்வுக்கும் ஆதரவு தெரிவிப்பு

Date:

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி அழித்து வரும் நிலையில், ஜப்பானிய பிரதமருக்கும் குவைத்தின் முடிக்குரிய இளவரசருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (29) நடைபெற்றது.

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபாவுக்கும் இடையில் டோக்கியோவில் நடந்த சந்திபில் இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக ஜப்பானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன விவகாரத்தில் இரு நாடு தீர்வுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என இரு நாட்டுத் தலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.

“காசாவிற்கு மனிதாபிமான உதவி வழங்கும் நாடாகவும் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் தலைமை நாடாகவும் குவைத்தில் வகிபாகத்தையும் பிராந்திய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் குவைத் முக்கிய பங்கு வகிப்பதையும் பிரதமர் இஷிபா பாராட்டினார்.

பலஸ்தீன விவகாரத்தில் ‘இரு-நாடு தீர்வுக்கும் பிராந்தியத்தின் நீண்டகால அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஒத்துழைப்பதற்கும் இரு தரப்பினரும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

மின்சாரம் மற்றும் உப்புநீக்கம் துறைகளுக்கு மேலதிகமாக , சுத்தமான எரிசக்தி மற்றும் காபனேற்றம் துறைகளில் ஒத்துழைப்பதற்கும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.

மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் (MoC) இரு தலைவர்களும் கைச்சாத்திட்டனர்.

நேரடி முதலீடு, இராஜதந்திர பயிற்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய துறைகளிலும் இரு நாடுகளும் மேலும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானுக்கு வந்த மன்னர் அல் சபா ஜூன் 2024 இல் முடிக்குரிய இளவரசராக பதவியேற்ற பிறகு ஜப்பானுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

Popular

More like this
Related

நாளை முதல் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய பகுதிகளில் மழை

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைகொள்ளும் என...

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...