சென்னை இஸ்ரேலிய திரைப்பட விழா இரத்து: மஜக,மார்க்சிய, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளின் தொடர் அழுத்தம்

Date:

இம்மாதம் 29 ஆம் திகதி சென்னையில் ICAF நிறுவனத்தினால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலிய திரைப்பட விழா இரத்து செய்யப்படுவதாக அதனுடைய ஏற்பாட்டாளர்கள் தமக்கு அறிவித்திருப்பதாக தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக காசாவில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர் அக்கிரமங்கள் படுகொலைகள் பட்டினிச்சாவுகள் இவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய கொடுமைகளுக்கு இலக்காகியுள்ள சமூகத்தின் நிலையை கருத்தில் கொண்டு இந்த திரைப்பட விழா நடத்தப்படக்கூடாது என அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த திரைப்பட விழா இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்புக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நடைபெறவிருந்த இஸ்ரேலிய திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, மே 29-ம் தேதி நடைபெறவிருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் (ம.ஜ.க) போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலிய திரைப்படங்களை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என மஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...