ஜனாதிபதி தலைமையில் 16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் இன்று

Date:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள்  திங்கட்கிழமை (19) அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றியவர்களை கௌரவித்து நினைவு கூரும் வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நாட்டிலுள்ள மார்ஷல் பதவி நிலைகளை வகிக்கும் முன்னாள் படைத்தளபதிகள் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

அதற்கமைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த முப்படைகளின் துணிச்சல்மிக்க  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த வருடாந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...