பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அலட்சியம் காண்பித்த அதிகாரிகள் பொறுப்புக்கூறவேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்

Date:

சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளத.

மிகமோசமானதும், மனிதத்தன்மையற்றதுமான பகிடிவதையின் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகிறோம்.

எந்தவொரு கல்வியியல் கட்டமைப்புக்களிலும் எந்தவொரு மாணவருக்கு எதிராகவும் பகிடிவதை மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அது நாட்டின் சட்டத்தை மாத்திரமன்றிஇ அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளையும் மீறுகின்ற செயலாகும்.

அதேவேளை அண்மையகாலத்தில் பதிவான சில பகிடிவதை சம்பவங்கள் அக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் புறக்கணிப்பு அல்லது அலட்சியத்தினால் நடைபெற்றிருக்கிறது என நாம் கருதுவதுடன், அவர்களும் இச்சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

அதேபோன்று 1998 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க கல்விக்கட்டமைப்புக்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறை தடுப்புச்சட்டத்தின் சரத்துக்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கிறோம். இவ்வாறான சட்டவிரோத பகிடிவதை செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும்.

அத்தோடு மேற்படி சம்பவம் தொடர்பில் சமனலவௌ பொலிஸாரினால் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...