வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம்

Date:

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட நிதித் தூய்மையாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் விரிவாக்க நிதியிடலுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் மற்றும் வலுவுறுத்தலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

மேலும், குறித்த செயலணியின் உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ற வகையில் நிதி செயற்பாட்டு செயலணியின் தராதரங்களுக்கு ஏற்புடையதான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ‘பரஸ்பர மதிப்பீடு’ எனும் பெயரில் அழைக்கப்படும் பரஸ்பர சமமான மீளாய்வு செயன்முறைக்கு இலங்கை உட்படுகிறது.

இலங்கை தொடர்பான 3 ஆவது மதிப்பீட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்துக்கு அமைய வெளிவிவகார விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்மொழிவை 2178 (2014) விரைவாக பிரகடனப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சட்டத்தை வகுப்பதன் மூலம் மேற்குறித்த முன்மொழிவின் ஏற்பாடுளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, 2026 மார்ச் மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான சட்டத்தை தயாரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. எனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை முன்மொழிவின் 2178 (2014) அடிப்படையில் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மறறும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...