பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மே 19 ஆம் திகதி லெபனானுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்தக்கோருவார் என பலஸ்தீன் மற்றும் லெபனானிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
லெபனான் முகாம்களிலிருக்கும் மஹ்மூத் அப்பாஸின் பத்தா இயக்க பிரிவினரும் பலஸ்தீனின் ஏனைய பிரிவினரும் ஆயுதங்களை களைய வேண்டும் என இருநாட்டு தலைவர்களும் வேண்டுகோள் விடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முகாம்களில் உள்ள பத்தா பிரிவினரின் ஆயுதங்களை களைவதற்கு ஏற்கனவே தீர்மானித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1948இல் இஸ்ரேலினால் வெளியேற்றப்பட்ட 7 இலட்சத்து 50,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களில் கனிசமானவர்கள் லெபனான் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இவர்களில் பத்தா, ஹமாஸ், பலஸ்தீன விடுதலைக்காக முற்போக்கு முன்னணி (PFLP) போன்ற குழுக்கள் முகாம்களிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் இயங்கி வந்திருக்கின்றன.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் விஜயத்தின் போது இவர்களின் ஆயுதங்களை களைவதற்கான அறிவித்தல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே மஹ்மூத் அப்பாஸ் ஹமாஸ் இயக்கத்தினரை ‘நாய்களே ஆயுதங்களை களையுங்கள்’ என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.