தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள பெடோயின் நகரமான லகியாவில், ஒரு பலஸ்தீன குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் திடீரென நுழைந்தது. விழா நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட திடீர் இராணுவ சோதனையால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இராணுவத்தினர் மணமகனையும் அவரது தந்தையையும் கைது செய்ததுடன், விழா நிகழ்வுகளில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
விழா நடந்த இடத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி தங்கள் நடவடிக்கையை இராணுவம் நியாயப்படுத்தியது. விழா நடந்து கொண்டிருந்தபோது, குழந்தைகள் உட்பட பலரை சிதறடையச் செய்யும் வகையில் அதிகாரிகள் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியதாக பலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுகளால் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
நெகேவ் பிராந்தியத்தில் சுமார் 300,000 இஸ்ரேலிய-பலஸ்தீனர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பெடோயின் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதில் சுமார் 100,000 பேர் இஸ்ரேல் அரசு சட்டவிரோதமாகக் கருதும் 35 அங்கீகரிக்கப்படாத கிராமங்களில் வாழ்கின்றனர்.
இவ்வாழ்விடங்களுக்கு இஸ்ரேல் அரசு மின்சாரம், தண்ணீர், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை வழங்க மறுத்துவருகிறது.
https://web.facebook.com/reel/649257291272263