உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சி இடையில் உடன்பாடு!

Date:

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.

இது தொடர்பான கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பான கொள்கைகள் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஒரு பொதுவான ஒருமித்த கருத்து இதன்போது எட்டப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

Popular

More like this
Related

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...