மிகவும் பிஸியான நிகழ்ச்சி நிரலுடன் கத்தாரை அடைந்த டிரம்ப்!

Date:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று புதன்கிழமை தனது வளைகுடா பயணத்தின் இரண்டாவது கட்டமாக கத்தாரின் தலைநகர் டோஹாவுக்கு வருகை தந்துள்ளார். கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் ஆல்தானியினால் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இப் பயணம், இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து, கத்தார் அமீரரின் அரண்மனையில் இருக்கும் அல்ஜஸீரா நிருபர் வஜத் வக்பி தெரிவிக்கையில்,

வளைகுடாவில் ஒரு மாற்றம் நிகழும் சூழலிலும் அமெரிக்காவின் புதிய அதிபர் இப்பகுதியில் இறங்கியுள்ள காரணத்தினாலும் இது முக்கியமானதாகும். டிரம்பின் , பாரம்பரிய அமெரிக்க முறைகளை விட வித்தியாசமான ஒரு நடைமுறையை மேற்கொள்கிறார்.

வஜத் மேலும் கூறுகையில், இஸ்ரேலைத் தவிர்த்து தனியாகவே சில முக்கிய விடயங்களில் டிரம்ப் முடிவுகளை மேற்கொள்கிறார்.

உதாரணமாக, அவர் இஸ்ரேலின் அனுமதியின்றி ஈரானுடன் உரையாடலை மேற்கொண்டுள்ளார், சிரியாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தனிப்பட்ட முறையில் நீக்கியுள்ளார். இதனால் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே பதற்றம் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

டிரம்ப், டோஹாவில் உள்ள அமீர் அரண்மனைக்கு செல்லும் போது பாரம்பரிய கத்தாரி இசையுடன் வரவேற்கப்பட்டார். அவரது பயணத் திட்டத்தில் இரு நாட்டு உச்சி மாநாடு, தொடர்ச்சியான கூட்டங்கள் மற்றும் லூசைல் அரண்மனையில் நடைபெறும் ஒரு உத்தியோகபூர்வ விருந்தோம்பல் போன்ற நிகழ்ச்சிகளும் அடங்கும்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...