ஈடன் அலெக்சாண்டர் (Edan Alexander) என்ற அமெரிக்கா பிராஜாவுரிமையுள்ள சியோனிச பணயக் கைதியை இன்று விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக் கைதியை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின் அல்கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி இரு தரப்பினரிடையே போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, இருதரப்பிலும் சிறைபிடிக்கப்பட்ட பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டு படிப்படியாக கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அந்த வகையில், ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரும், அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவருமான ஈடன் அலெக்ஸாண்டர் என்பவரை 580 நாட்களுக்குப் பிறகு விடுவிக்க ஹமாஸ் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) இந்த வாரம் மத்திய கிழக்கு செல்கிறார்.அதற்குள் அலெக்சாண்டர் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அமைதி உடன்பாட்டை எட்டவும், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் சென்று சேரவும் அது வழியமைக்கலாம் என்று ஹமாஸ் கூறியது.
அமெரிக்க பணயக் கைதி விடுவிக்கப்படுவதை உறுதிசெய்ய கத்தார், எகிப்து, துருக்கியே ஆகிய நாடுகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்-ஹாயா (Khalil Al-Hayya) தெரிவித்தார்.
ஆதாரம் : Reuters