இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலில் மனிதநேய பணியாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர்: IHH துருக்கி நிவாரண அமைப்பு கண்டனம்

Date:

காசா நகரத்தில் உள்ள அல்-நஃபாக் பகுதியில் துருக்கி இஸ்தான்புல்லை தலைமையிடமாகக் கொண்ட  IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளையின் திட்ட பணிப்பாளர் முகமது அல்-மபாயீத் கொல்லப்பட்டார்.

உலக உணவுத் திட்டத்துடன் IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை இணைந்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்றபோது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து மனிதநேய பணியாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா திட்டத்தில் பணிபுரியும் மனிதநேய பணியாளர்களான முகமது அல்-முபாயித், அகமது போஸ்டன், மொட்டாஸ் ரஜாப், இஷாக் அல்-தாயிஃப் மற்றும் ஜமால் அல்-மபாயீத், தாக்குதல்களில் கொல்லப்பட்டதுடன் இருவர் கடுமையாக காயமடைந்ததாக IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசாவில் பலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்குவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மனிதாபிமான ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ‘கொடூரமான தாக்குதல்’ எனவும் ‘கடவுள் தியாகிகள் மீது கருணை காட்டட்டும், அவர்களின் குடும்பங்களுக்கும் பொறுமையை வழங்கட்டும் எனவும் IHH அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...