வேரா பாபௌன்
சிலி தேசத்திற்கான பலஸ்தீன தூதுவர்
காசாவில் உள்ள பெயர் பதிவுகளில் டாக்டர் அலா அல்-நாஜ்ஜார் என்பது வெறுமனே மற்றொரு பெயர் மட்டுமல்ல. அவர் அழிக்கப்பட்ட காசாவின் ஆன்மா போன்றவர் ஆவார்.
ஒரு குழந்தை மருத்துவரான டாக்டர் ஆலா அல்-நாஜ்ஜார் பத்து குழந்தைகளின் தாயும் ஆவார்.
காஸாவில் நடைபெறும் இஸ்ரேலின் மிருகத்தனமான வன்முறையால் காயமடைந்த எண்ணற்ற குழந்தைகளுக்கு உயிர்நாடியாக இருந்த மருத்துவர் நாஜ்ஜார், உயிர்களைக் காப்பாற்றவே உயிர் வாழ்ந்து வரும் ஒரு உன்னதமான பெண்மணி ஆவார்.
அண்மையில் அவருக்கு அவருடைய வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஒரு வேலையை செய்ய நேர்ந்தது.
அன்று தனது பத்து குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு, நாசர் மருத்துவ வளாகத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றச் சென்றார் மருத்துவர் அல்-நாஜ்ஜார்.
அப்போது அவருடைய வீடு இருந்த கான்யூனிஸ் பகுதியில் பயங்கர வான் தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, மருத்துவமனையின் பிணவறையில் தனது சொந்த ஏழு குழந்தைகளின் எரிந்த உயிரற்ற உடல்களை அடையாளம் காண வேண்டிய அவல நிலை டாக்டர் அல்-நாஜ்ஜாருக்கு ஏற்பட்டது.
அன்றைய தாக்குதலில் இறந்த சிறார்களில் 12 வயது முதல் ஒரு வயதுக்குட்பட்ட, டாக்டர் அல்-நாஜ்ஜரின் அன்புக்குரிய ஏழு குழந்தைகள் இருந்தனர்.
மேற்படி தாக்குதலில், டாக்டர் அல்-நாஜ்ஜாருடைய 11 வயது ஆதம் மட்டுமே உயிர் பிழைத்தான். டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் கணவர் டாக்டர் ஹம்தி அல்-நஜ்ஜார் தாக்குதலில் படுகாயமடைந்தார்.
இஸ்ரேலியர்களின் ஒரே ஒரு தாக்குதல் ஒரு குடும்பத்தையே சாம்பலாக்கியது. அத்துடன் காயங்களை குணப்படுத்தும் ஒரு தாயின் இதயம் குணப்படுத்த முடியாத அளவுக்கு காயமடைந்தது.
இது உலகில் கற்காலத்தில் நிகழ்ந்த ஒரு கொடிய சவம்பவம் அல்ல. இது இன்றைய காசாவாகும். உலகம் கட்டுப்படுத்தத் தவறிய ஒரு மிருகத்தனமான இராணுவ ஆக்கிரமிப்பின் கொடூர விளைவாகும்.
அல்-நஜ்ஜர்களின் குழந்தைகள் பதிவேடு ஒன்றில் உள்ள வெறும் முகம் தெரியாத எண்கள் அல்ல. அவர்களுக்கு பெயர்கள் இருந்தன. அவர்களின் இதயங்களில் கனவுகள் இருந்தன.
உலகின் மற்ற குழந்தைகளுக்குப் போலவே, அவர்களின் வீடுகளில் அவர்களுக்கும் பொம்மைகளை மற்றும் விளையாட்டுச்சாமான்கள் இருந்தன.
அவர்கள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாடி வந்தனர். வீட்டுச் சுவர்களில் படங்களை வரைந்தனர். அவர்கள் யாருக்கும் சுமையாக இருக்கவில்லை. மாறாக. அவர்களை அவர்களுடைய பெற்றோர் உயிரை விட நேசித்து வந்தனர்.
சுருக்கமாகக் கூறுவதாயின் அவர்களும் வாழும் உரிமை கொண்ட மனிதப் பிறவிகளாகவே இருந்தனர்.
ஆனால் கொடிய யூதர்கள் அச்சிறார்களுக்கு அந்த உரிமையை மறுத்தனர். அவர்கள் செய்த ஒரே குற்றம் யூதர்களால் அபகரிக்கப்பட்ட தமது நாட்டைத் திரும்பிப்பெற போராடும் வீரர்கள் மிகுந்த பலஸ்தீனத்தில் பிறந்ததுதான்.
யூதர்களால் மட்டுமே செய்யக்கூடிய இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களை நியாயப்படுத்தக்கூடிய எந்த ஒரு தராசும் உலகில் எங்கும் இல்லை. இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்த இஸ்ரேலிடம் எந்த வாதமும் இல்லை.
யூதர்கள் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக இந்தக் படுகொலைகளைச் செய்யவில்லை. மாறாக, பாலஸ்தீன மக்களின் குடும்பங்கள், எதிர்காலம் மற்றும் இருப்பு உரிமையை பூமியில் இருந்து திட்டமிட்ட அழிக்கவே யூதர்கள் இந்த அக்கிரமத்தை செய்து வருகின்றனர்.
டாக்டர் நஜ்ஜார் துக்கத்தில் ஆழந்துள்ள ஒரு தாய் மட்டுமல்ல. அவர் காசாவின் உடைந்த இதயத்தின் பிம்பம் ஆவார். அவருடைதைப் போன்ற கண்ணீர் கதைகள் காசா முழுவதும் எதிரொலிக்கின்றன. ஆனால் அவரது இழப்பு, அதன் கொடுமையின் ஆழம், உலகம் இஸ்ரேலை பார்த்து ‘போதும் இனி போதும்’ என்று சொல்ல கட்டாயப்படுத்த வேண்டும்.
உடல்களை எண்ணுவதை நிறுத்தி விட்டு உலகின் மனசாட்சி உயிருள்ளவர்களின் பதிவேட்டில் இருப்பவர்களை காக்க இனியேனும் முன்வருமா? பிறரை காப்பாற்றும் நஜ்ஜார் போன்றவர்களின் அதே கைகளால் அவர்களுடைய சொந்தக் குழந்தைகளை அடக்கம் செய்யும் அவலம் இன்னும் எத்தனை காலம் தான் தொடர வேண்டும்?
இடிபாடுகளில் எவருக்கும் எதிர்காலம் இல்லை.
பலஸ்தீனர்களுக்கு பசியிலிருந்து பாதுகாப்பு இல்லை. இங்கு நடப்பது பழிவாங்கல் அல்ல. இது இனப்படுகொலை ஆகும். இது ஒரு மூலோபாய யுத்த நடவடிக்கை அல்ல, மாறாக திட்டமிட்ட இன அழிப்பாகும்.
மருத்துவர் நஜ்ஜாரின் பெயரைப் போன்றே அவரது குழந்தைகளின் பெயர்களையும் நாம் உலகிற்கு உரக்கக் கூற வேண்டும். அந்த உன்னதமான தாய் மற்றும் குழந்தைகளின் துயரக் கதையைப் பயன்படுத்தி, இஸ்ரேல் இந்த பயங்கரத்தை தொடர உதவிய உலக நாடுகளின் மௌனத்தையும், தவறான நியாயப்படுத்தல்களையும், உலகின் அரசியல் இயலாமையையும் உடைத்தெரிய வேண்டும்.
இராஜதந்திரிகளாக அல்ல, இந்த கிரகத்தில் ஒன்றாக வாழும், துடிக்கும் இதயங்களைக் கொண்ட மனிதர்களாக, ஒவ்வொரு அரசாங்கத்திற்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும், உலகின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். இது நாளை அல்ல, மறுநாள் அல்ல, இன்று அல்ல இந்த நொடியிலேயே நிறுத்தப்பட வேண்டும்.
நஜ்ஜாரின் உயிர் பிழைத்த ஒரே குழந்தையான ஆதமை, பலஸ்தீனத்தில் எஞ்சியிக்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற நம்மிடம் உள்ள திறனை உலகிற்கு நினைவூட்டப் பயன்படுத்துவோமாக.
பத்தொன்பது மதங்களாக காசாவில் இஸ்ரேல் கொடூரமாக படுகொலைகளை செய்து வந்த போது உலகம் சாதித்த மௌனத்தின் இழிவை பறைசாற்ற இனியும் ஆதாரங்களோ அல்லது பரபரப்பான செய்திகளோ தேவையில்லை. காசாவிற்குத் தேவைப்படுவது அவசர நடவடிக்கையாகும்.
நஜ்ஜாரின் இதயத்தை உலுக்கும் கதை, காசாவிலிருந்து நாம் கேட்கும் அது போன்ற கடைசி கதையாக இருக்கட்டும். டாக்டர் நஜ்ஜார் போன்ற தாய்மார்கள் மற்றும் பலஸ்தீனத்தில் ஆதாம் போன்ற குழந்தைகளின் பெயரால், இஸ்ரேலில் இந்த மனிதாபிமானமற்ற செயல்முறை முடிவுக்கு வரட்டும்.