இந்தியா மீதான தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் “Bunyan Marsoos”’ என பெயரிட்ட பாகிஸ்தான்!

Date:

பாகிஸ்தான் இராணுவம் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய இராணுவத்தினர்  பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் தொடர்பாகச் வெளியுறவுத் துறை, இந்தியா இராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களை விளக்கம் அளித்தனர்.

இந்திய இராணுவத்திற்கு எதிராக பதில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ‘ஆபரேஷன் “Bunyan Marsoos”ஐ தொடங்கியுள்ளது,” என்று அனைத்து அரசின் அதிகாரபூர்வ ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

“Bunyan Marsoos” என்பது முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனில் உள்ள ஒரு வசனம் ஆகும்.

அல் ஜசீராவின் செய்திப்படி, “Bunyan Marsoos” என்பது குர்ஆனில் உள்ள ஒரு அரபு சொற்றொடர், இது நேரடியாக ‘ஈயத்தால் ஆன ஒரு அமைப்பு’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

“அல்லாஹ் தனது பாதையில் போர் அணிவகுத்து செல்பவர்களை உண்மையாக நேசிக்கிறான், அவர்கள் ஒரு வலுவான கட்டிட கட்டமைப்பைப் போல திடமான உறுதி கொண்டவர்கள்.” என்று கூறப்பட்டு உள்ளது.

அதாவது பாகிஸ்தான் தன்னை ஈயத்தால் ஆன அசைக்க முடியாத அமைப்பு என்றும் அல்லாஹ் பாதையில் போர் செய்வதாக கருதிக்கொண்டு இந்த பெயரை வைத்துள்ளது.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்த பெயரை வைத்துள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...