இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவுக்கு ஹமாஸ் ஒப்புதல்!

Date:

காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் கோரிக்கையை ஏற்று, ஹமாஸ் காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக, அந்தக் குழுவிற்கு நெருக்கமான பலஸ்தீன அதிகாரி திங்களன்று தெரிவித்தார்.

10 பணயக் கைதிகள் விடுதலை மற்றும் 70 நாட்கள் போர் நிறுத்தம் ஆகியவற்றைக் கொண்ட புதிய திட்டத்தை, மத்தியஸ்தர்கள் மூலம் ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன் பிரகாரம் 70 நாட்கள் யுத்த நிறுத்தம் இடம்பெறும். 10 பணயக் கைதிகள் இரண்டு கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்,அத்தோடு ஹமாஸிடம் மரணித்த பணயக்கைதிகளின் உடல்கள் விடுவிக்கப்படும் இதற்கு பகரமாக இஸ்ரேலிடமுள்ள பணயக் கைதிகளும் விடுவிக்கப்படவேண்டும்.

போர்நிறுத்த ஒப்பந்தம் இடம்பெற்ற முதலாவது நாளில் 5 இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இந்த ஒப்பந்தத்தின் 70ஆவது நாளில் இன்னும் 5 பேர் விடுவிக்கப்படுவார்கள்.

அதேபோல ஜனாதிபதி ட்ரம்ப் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இக்காலப்பகுதியில் கடந்த ஜனவரியில் செய்யப்பட்ட ஒப்பந்ததின் பிரகாரம் இஸ்ரேல் தனது படைகளை வாபஸ் பெற வேண்டும்.

என்னதான் ஹமாஸ் இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தாலும், இஸ்ரேல் தரப்பிலிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை. இதற்கு முன்னரும் கூட இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் அது அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இஸ்ரேல் இந்த போர் நிறுத்த ஒப்பந்ததை முறித்துக்கொண்டு மார்ச் மாதம் 18 மீண்டும் காசா மீது தனது தாக்குதலை தொடங்கியது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...