ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் 12 பேர் விடுதலை!

Date:

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடித்து, மேற்படி பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்து, இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களிடம் இருந்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட வழக்கு பொருட்களை அவர்களுக்கு விடுவிக்க உத்தரவிடுமாறு கோரினார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பொருட்களை சந்தேக நபர்களுக்கு விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...