உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு திருச்சியில் இன்று 9ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை திருச்சி பொறியியற் கல்லூரியான எம்.ஐ.இ.டி பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்று தினங்களாக இம்மாநாடு நடைபெறுகிறது.
இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இலங்கையில் இருந்து 60 பேர் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இன்றைய முதல் நாள் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
அத்துடன் தமிழக மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் இம்மாநாட்டின் கலந்துகொள்கின்றனர்.