மே மாதம் 9,10,11 ஆம் திகதிகளில் தமிழ்நாடு திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இனிதே நிறைவுற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸடாலின் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகளும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் உள்ள பேராளர்களும் இலக்கியவாதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இறுதிநாள் நிகழ்வின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூத் அவர்களுக்கு அவருடைய இலக்கிய பணிகளுக்காக இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான கே.என். பாஷா, ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் இவ்விருதை வழங்கினார்.
இம்மூன்று நாள் மாநாட்டில் முஸ்லிம் மீடியோ போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.