இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட எம்முடைய பிரதேசத்தையும் ஆளுவதற்கோ அல்லது சட்ட ரீதியாக உரிமை கோருவதற்கோ எவ்வித அருகதைகளும் இல்லை என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
இன்று 77 ஆவது அல் நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வீடுகளிலிருந்து பலாத்காரமாக துரத்தப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புகின்ற விடயத்தில் விட்டுக் கொடுப்பதோ அந்த விடயத்தில் அலட்சியம் செய்வதோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.