கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை 36 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
பேராதனை வீதி, வில்லியம்கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இருந்து நகர சபை சந்திப்பு வரை, அஸ்கிரிய, குள சுற்றுவட்டம், ரஜ பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னகும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மையத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.
கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் போது நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.