கொத்மலை பஸ் விபத்து: விசாரணைக்கு விசேட பொலிஸ் குழு நியமனம்

Date:

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை செய்ய முன்னால் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் 5 பேர் கொண்ட பொலிஸ் குழுவை பிரதி பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் விபத்துக்குள்ளானது.

இதன்போது, 22 பேர் உயிரிழந்துள்ளதோடு,  40 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விபத்துக்கான காரணங்களை ஆராயவும்,  எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதை தவிர்க்கவும் இலங்கை பொலிஸ் செயல்படுத்தக்கூடிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் குழுவுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...