சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்: 25 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு சிரிய ஜனாதிபதி ஒரு அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!

Date:

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப் , பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின.

இப்போது சிரியா முன்னேறவேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என தெரிவித்தார்.

சிரியா மீதான தடைகளை நீக்க சவூதி அரேபிய இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை ட்ரம்ப் நீக்கியுள்ளார்,

இந்நிலையில், டிரம்ப், சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல் ஷராவை சந்தித்தார். 25 ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா மீதான தடைகளை நீக்க பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அந்த நாடுகள் தற்போது இதனை வரவேற்றுள்ளன.

ட்ரம்பின் அறிவிப்பை சிரியாவில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் வரவேற்று  ட்ரம்ப் பிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

தற்போது சிரியா அதிபராக இருக்கும் அகமது அல்-ஷரா, சிரியா போரின் போது அல்காயிதா பிரிவின் தலைவராக இருந்தவர்.

2016ஆம் ஆண்டு அந்த அமைப்புடன் தொடர்பை துண்டித்த நிலையில், தற்போது சிரியா இடைக்கால அரசின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

சிரியா மீதான தடைகள் நீக்கப்பட்டதன் மூலம் அந்த நாட்டின் நிலை விரைவில் முன்னேற்றம் காணும் என்றும், சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என்கின்றனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...