இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூஸூப் அவர்களும் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் கௌரவ அதிதியாகவும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அஸாத் சாலி அவர்களும் கலந்து கொண்டனர்.
ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் புத்தகத்தை மதிப்பாய்வு செய்ததுடன் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் முதல்வரும் இஸ்லாமிய அறிஞருமான அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத், மற்றும் திறந்த பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் திருமதி சுமையா ஷெரிபுதீன் அவர்களும் உரையாற்றினர்.
புத்தகத்தின் முதல் பிரதியை டாக்டர் ஷாஃபி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பிடம் வழங்கி வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்காம் நூராமித், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், தினகரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் செந்தில் வேலவர், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் ஆசிரியர்கள், டாக்டர் ஷாஃபியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் மண்டபம் நிறைந்து கலந்து சிறப்பித்தனர்.