டொனால்ட் ட்ரம்ப் அபுதாபி விஜயம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் கத்தார் நாட்டில் இருந்து நேற்று அபுதாபிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ட்ரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13ஆம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ட்ரம்பிற்கு அமீரக மன்னர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்பு அளித்தார்.

முன்னதாக அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள்  இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழங்க முப்படை இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதில் இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. பிறகு நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக மன்னர்  ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் இருதரப்பு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

முதலாவதாக சவூதி அரேபியா சென்று அங்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அல் சவுத்தை சந்தித்து பேசினார். இதில் இராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ரியாத் நகரில் நடந்த வளைகுடா-அமெரிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த உச்சி மாநாட்டை தொடர்ந்து டிரம்ப்   கத்தார் சென்றார். அப்போது அந்நாட்டின் அமீர் (ஆட்சியாளர்) ஷேக் தமிம் பின் ஹமத் பின் கலீபா அல் தானியை சந்தித்து பேசி இருதரப்பு வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தார்.

தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டிரம்ப் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...