2024.05.16 ஆம் தேதி புனித மக்காவில் வசிக்கின்ற இலங்கையரான சாதிக் ஹாஜியாரினால் அனுப்பி வைக்கப்பட்ட 15,000 குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளும் இன்று வரை சுங்கத்திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
அல்குர்ஆனின் சிங்கள தமிழ் மொழி மூல மொழிபெயர்ப்புகளுடன் 20,000 அல்குர்ஆன் பிரதிகளும் இன்னும் சில இஸ்லாமிய நூல்களும் அடங்கிய கொள்கலன் 2024.06.22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது இதில் அல்குர்ஆன் பிரதிகளைத் தவிர ஏனைய நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் இருந்து வெளிவராமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அல் குர்ஆனின் தமிழ் சிங்கள தர்ஜுமாக்களையும் ஏனைய நூல்களையும் வெளியில் எடுப்பதற்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் நூல் விமர்சன மற்றும் வெளியீடுகள் குழு சிபாரிசு வழங்கியிருக்கவில்லை.
இந்நிலையில் அல்குர்ஆனின் தமிழ் சிங்கள தர்ஜுமாக்களில் மேலதிக விளக்கங்களை அடிக்குறிப்பிட்டு வெளியிடுவதற்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் நூல் விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிய வருகிறது
குறித்த சிபாரிசு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தினால் புத்த சாசன சமய விவகார மற்றும் கலாச்சார அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.