பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Date:

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தனர்.

மேலும் விசாரணை அமைப்புகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளது என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வெளி மாநிலங்களில் உள்ள ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்ச்னை இருந்தால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போதைய நிலையில் இந்த மனுவை விசாரிக்க முடியாது. மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது, அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

நாட்டின் மீதான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது என, பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் ஃபதேஷ் சாஹுவுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...