தீவிர வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிப்பு, 239 வீடுகள் சேதம்!

Date:

சீரற்ற வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (29) மாலை முதல் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றன.

அதன்படி, மழை மற்றும் காற்று நிலைமைகளால் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்   தெரிவித்துள்ளதுடன் 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்சரிவுகள் குறித்து பொதுமக்கள்  எச்சரிக்கையாக இருக்குமாறும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் வசிப்பவர்கள் மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்  என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...