துருக்கி ஜனாதிபதியை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் முக்கிய கலந்துரையாடல்!

Date:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார்.

அங்கு துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானுடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் முதன்மையாக  கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவுடனான மோதலின் போது அர்தூகானின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பிறகு, ஷெபாஸ் ஷெரீப் ‘எக்ஸ்’ பதிவில், “இன்று இஸ்தான்புல்லில் எனது அன்பு சகோதரர் ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானைச் சந்தித்தது ஒரு மரியாதை.

சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலின் போது எங்களுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இந்த பிரச்சினையில் இந்தியாவிற்கு இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்தன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களையும் வழங்கி உதவின.

தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், போர் சமயத்தில் தங்களுக்கு உதவிய துருக்கிக்கு நன்றி சொல்லும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...