புத்தளம் நகரசபையின் ELF வாகனத்தை திருத்த 2 மில்லியன் ரூபா: இஷாம் மரிக்கார் சுட்டிக்காட்டு

Date:

புத்தளம் மாநகர சபைக்கு சொந்தமான 47-2853 இலக்க ELF வாகனத்தை திருத்துவதற்காக 21 இலட்சத்து 78 ஆயிரத்து 50 ரூபா (2,178,050.00)
புத்தளத்திலுள்ள வாகன திருத்த நிலையமொன்றுக்கு வழங்கப்படவுள்ளதாக புத்தளம் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர்  (Clean Nation Party) இஷாம் மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பிலான ஆவணங்கள் அனைத்தும் மாநகர சபையின் PUUC/2025/04/7/277 இலக்க கோப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜுன் 2ஆம் திகதிக்கு பின்னர் புதிய மாநகர சபை பொறுப்பேற்கவுள்ள நிலையில் இந்த கொடுப்பனவை நிறுத்துமாறு அவர் நகரசபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையினை அவர் புத்தளம் உள்ளூராட்சி சபை உதவி ஆணையாளருக்கும், புத்தளம் தொகுதி தேசிய மக்கள் சக்திக்கும், புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு, புத்தளம் மாவட்ட செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...