காத்தான்குடி நகர சபையில் மு.கா. ஆட்சியமைப்பு – தவிசாளராக அஸ்பர்

Date:

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 10 ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பான்மைப் பலத்துடன் காத்தான்குடி நகர சபையில் ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளராக எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதித் தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்துள்ளார்.

தவிசாளர் சாஹுல் ஹமீத் முஹம்மத் அஸ்பருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் செயலாளர் கட்சித் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் முன்னிலையில் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (14) மாலை கையளித்தார்.

காத்தான்குடி நகர சபையின் 18 ஆசனங்களில் ஸ்ரீ ல மு கா 10, NPP 3, ஐக்கிய மக்கள் சக்தி 1, NFGG 2, இலங்கை தொழிலாளர் கட்சி 1, சுயாதீனக் குழு 1 ஆசனங்களை வென்றிருந்தன.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...