பலஸ்தீன பூமி ஆக்கிரமிக்கப்பட்டு இம்மாதம் 15 ஆம் திகதியுடன் 77 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இதனை முன்னிட்டு விசேட நக்பா தின நிகழ்வு கொழும்பில் உள்ள பலஸ்தீன அரசின் தூதரகம் மற்றும் பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவின் ஏற்பாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் மஹிந்த சில்வா கேட்போர் கூடத்தில் மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.
‘நக்பாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச நடவடிக்கை மற்றும் பலஸ்தீனிய மக்களின் மறுக்க முடியாத உரிமைகளை உணர்தல்’என்ற கருப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்வார்கள்.
மதத் தலைவர்கள், கொழும்பில் உள்ள இராஜதந்திர தூதரக அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலஸ்தீன ஆதரவு நண்பர்கள் பலரும் கலந்துகொள்வார்கள்.