காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக காஷ்மீரில் உள்ள லஷ்கர்- இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளின் தளங்களை குறி வைத்து இந்திய இராணுவம் முப்படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் ஆதரவாக நிற்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22 நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள முகாம்களை துல்லியமாக, ஆயுதங்களுடன் தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள் காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.
பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஏராளமான அமைப்புக்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் SCALP (Storm Shadow) மிசைல், HAMMER (Highly Agile Modular Munition Extended Range) புத்திசாலி குண்டு, மற்றும் லாயிட்டரிங் மியூனிஷன்ஸ் (காமிகாஸி டிரோன்கள்) உள்ளிட்ட உயர் துல்லியமான நீண்ட தொலைவு தாக்குதல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இஸ்ரேல் வழங்கிய ரஃபேல் ஜெட் விமானங்கள், ரஷ்யாவின் சுகோய் உள்ளிட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுதங்களைப் பொறுத்தவரை, SCALP மிசைல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது Storm Shadow என அழைக்கப்படும் இந்த ஏவுகணை 250 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்கக்கூடிய ஏவுகணையாகும்.
ஆழமான இலக்குகளை தாக்க முடியும். HAMMER, 50-70 கிலோமீட்டர் தூரம் வரை தாக்க முடியும் குண்டாகும். இதனை குழுக்களின் தலைமையகம், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை அழிக்க இந்திய இராணுவத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கமளித்துள்ளது.
உளவு அமைப்புகள் அளித்த விவரங்கள் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவுக்கு ஆதரவாகவே பல உலக நாடுகளும் இருக்கிறன
குறிப்பாக அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இந்தியாவின் பக்கம் இருக்கின்றன. தாக்குதல் நடத்தப் போவது எங்களுக்கு முன்னரே தெரியும், அதே நேரத்தில் இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
முன்னதாக இந்தியா மீது கை வைத்தால் பாகிஸ்தானை அழித்து விடுவேன் என இவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இஸ்ரேல் மீது ஹமாஸ், ஹவுதி அமைப்புகள் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நீண்ட காலமாக ஹமாஸ், ஏமனின் ஹவுதி உள்ளிட்ட அமைப்புகளுடன் போரில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் லெபனான் ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமைப்புகளுக்கு எதிராகவும் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வந்த லஸ்கர், ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையகங்களை குறி வைத்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் இஸ்ரேல் அமெரிக்கா இந்தியாவுடன் துணை நிற்கின்றன.
மேலும் ஒருவேளை பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் இரு நாடுகளும் இந்தியாவுடன் நிச்சயம் கைகோர்க்கும் என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.