நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

Date:

நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இன்று (8) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​நடைமுறை குறித்த கேள்வியை எழுப்பியபோது ஏற்பட்ட சிக்கல் சூழ்நிலை காரணமாக, அவர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சபைக்கு தலைமை தாங்கிய அவைத் தலைவர் அரவிந்த செனரத், அர்ச்சுனா எம்.பியை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அவைத்தலைவரின் ஆலோசனையைக் கேட்கத் தவறியதற்காக நிலையியற் கட்டளை 71 இன் கீழ் அவர் வெளியேற்றப்பட்டார்.

தவறான நடத்தைக்காக சபையின் எஞ்சிய காலத்திற்கு ஒரு உறுப்பினரை நீக்குவதற்கு நிலையியற் கட்டளைகளில் வழங்கப்பட்டுள்ள விதிகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவைத் தலைவருக்கு நினைவூட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...