நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பஸ் விபத்து : 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம் !

Date:

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 37க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மலைப்பாங்கான நிலப்பரப்பில் கூர்மையான வளைவில் பயணிக்கும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...