கொத்மலை பஸ் விபத்து; உரிய பிரதேச செயலங்களுக்கு இழப்பீடு தொகை அனுப்பி வைப்பு

Date:

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதோடு அந்தப் பணம் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் வாழ்ந்த திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனாகொடுவ, படுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனாதவில்லுவ, சிலாபம், புத்தள, தனமல்வில, வெல்லவாய மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...